வாட்ஸ் ஆப்புக்கு இனி 'நோ' போன் நம்பர்.! வர இருக்கும் புதிய அப்டேட்.! இதன் சிறப்பம்சங்கள் என்ன.?
இன்றைய நவீன உலகில் தகவல் தொடர்புக்கு பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலி வாட்ஸ் ஆப். இந்த செயலியில் குறுஞ்செய்திகள் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகளும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது.
வாட்ஸ் ஆப் செயலி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது. பயணர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதேபோன்று தற்போது ஒரு அற்புதமான அப்டேட் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி பயனர்களின் செல்போன் எண்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் தங்களது செல்போனிற்கு பதிலாக பெயரை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ் ஆப் கணக்கு துவங்குவதற்கு மொபைல் எண் தேவைப்பட்டாலும் கணக்கு துவங்கிய பிறகு நமது எண்களை பிரைவசி அடிப்படையில் மறைத்து வைக்க இயலும்.
இதனை பயன்படுத்துவதற்கு செல்போன் எண்கள் தேவை இருக்காது என்றும் whatsapp கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு என ஒரு யூசர் நேம் கிரியேட் செய்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. இந்த வசதி தற்போது பரிசோதனையில் இருக்கிறது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.