இனி 'Truecaller' தேவையில்லை..!! மோசடி அழைப்புகளை ஈசியா தெரிஞ்சிக்கலாம்..!! ஜூலை 15 முதல் மாஸ் அப்டேட்..!!
நம்முடைய போனுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தான் பார்ப்போம். ஆனால், நம் தொடர்பில் இல்லாதவர்கள் என்றால், அவர் யார் என்று தெரியாமல் எப்படி போனை எடுப்பது என்ற தயக்கம் இருக்கும். இதற்காகவே யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள 3ஆம் தரப்பு செயலியான ட்ரூ காலரை பலரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அந்த செயலி தேவைப்படாது.
உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் அழைத்தால் கூட ஆட்டோமேடிக்காக அழைப்பவரின் பெயர் இனி டிஸ்பிளேவில் தெரியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இது தொடர்பாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ’Calling Name Presentation' (CNP) எனும் இந்த வசதியின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த புதிய வசதி விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
அழைப்பவர்களின் பெயர் எப்படி தெரியும்.?
சிம் வாங்கும்போது ஒவ்வொருவரும் ஆவணங்களை நிச்சயம் சமர்பித்திருப்பார்கள். அந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, யார் அழைப்பு மேற்கொண்டாலும் அவர்களுடைய விவரம் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். ஸ்பேம், மோசடி அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
CNP சேவை எப்படி செயல்படும்.?
உங்களுக்கு ஒரு கால் வருகிறது என்றால் அப்போது மொபைல் எண்ணுடன் அழைப்பவரின் பெயரும் தெரியும். இது தவிர, ஸ்பேம் அழைப்புகளை முழுமையாக நிறுத்துவதில் வெற்றி கிடைக்கும். ஸ்பேம் அழைப்புகள் நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, 60 சதவீத மக்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 3 ஸ்பேம் அழைப்புகளைப் பெறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. எனவே, CNP சேவை அறிமுகமானதும் இந்த மோசடிகளுக்கும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ஏற்கனவே 2 மனைவிகள்..!! நடுவே வந்த அமலா..!! அதியமான் செல்போனில் நர்ஸ்களின் ஆபாச படங்கள்..!! லட்சக்கணக்கில் கைமாறிய பணம்..!!