”இனி வங்கிக்கு சென்று பணம் அனுப்புவதில் சிக்கல்”..!! நவ.1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை..!! RBI வெளியிட்ட அறிவிப்பு..!!
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டு, அவைகள் அனைத்தும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன?
ரொக்கப் பணம் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிவு ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ் பணம் அனுப்பும் வங்கிகள், பணம் செலுத்தும் சேவைகளில் பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி பற்றிய பதிவுகளை பராமரிக்க வேண்டும். ரொக்கப் பணம் செலுத்தும் சேவைகளுக்கு, வங்கிகள் ஆனது கேஒய்சி உடன் சேர்த்து சரிபார்க்கப்பட்ட செல்போன் எண், சுய சான்றளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களை பயன்படுத்தி பணம் அனுப்புபவர்களை பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், பணம் அனுப்புபவரின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இப்போது கூடுதல் அங்கீகரிப்பு காரணி மூலம் சரிபார்ப்பு தேவைப்படும். இந்த நடவடிக்கையானது, பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்பும் வங்கிகள் ரொக்க வைப்புத்தொகை தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும்.
இதில் ஐஎம்பிஎஸ் / என்இஎப்டி மெசேஜ்கள் வழியாக பரிவர்த்தனை பணம் அனுப்புபவரின் விவரங்களைச் சேர்ப்பது மற்றும் ஐடென்ஃடிபையர் வழியாக கேஷ் பேஸ்டு ரெமிட்டன்ஸ் பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுவது ஆகியவைகள் அடங்கும். கடந்த 2011ஆம் ஆண்டு உள்நாட்டுப் பணப் பரிமாற்றக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியதில் இருந்து, வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
KYC தேவைகளை பூர்த்தி செய்வதிலும், டிஜிட்டல் கட்டண விருப்பங்களின் எழுச்சியாலும், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய மாற்றங்கள் இந்த வளர்ந்து வரும் இயக்கவியலுக்கு ஏற்றவாறு நாம் எவ்வாறு மாற வேண்டும். அப்படி மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்பதை பிரதிபலிக்கின்றன. இது முழுக்க முழுக்க பணம் அனுப்புவரின் பாதுகாப்பு தொடர்பான விதிகளாக இருந்தாலும் கூட, பணம் அனுப்பும் செயல்முறையை இன்னும் கடினமாக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.