For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மளிகை கடை வைக்க என்னென்ன License தேவைப்படும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

What license is required to set up a grocery store? Knowing that, you too can run a grocery store.
10:24 AM Oct 22, 2024 IST | Chella
மளிகை கடை வைக்க என்னென்ன license தேவைப்படும்    கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க     இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

நமது ஊரில் நிறைய மளிகைக் கடைகள் இருக்கும். அவர்கள் அந்த மளிகை கடையை சாதரணமாக ஒன்றும் ஆரம்பித்துவிடுவதில்லை. அதற்கு முதலீடு, உழைப்பு இவை அனைத்தையும் செலவு செய்கிறார்கள். இந்த மளிகை கடை ஆரம்பிக்க சில வகையான License-யும் வாங்கிய பிறகு தான் மளிகை கடையை ஆரம்பிக்கின்றன. அந்த வகையில், மளிகை கடை வைக்க என்னென்ன License தேவைப்படும்? என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட மளிகை கடை வைக்கலாம்.

Advertisement

(1). நகராட்சியிடம் லைசன்ஸ் (License) வாங்க வேண்டும்:

அதாவது ஒவ்வொரு ஊரிலும் நகராட்சி, பேரூராட்சி போன்ற அலுவலகங்கள் இருக்கும். உங்கள் ஊரில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சியில் நீங்கள் சொந்தமாக மளிகை கடை வைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினால் அவர்கள் அதற்கான License-ஐ வழங்குவார்கள். இந்த License எதற்கு நமக்கு தேவைப்படும் என்றால் மின்சாரம் வசதி, தண்ணீர் வசதி இதுபோன்ற விஷயங்களுக்கு இந்த License உங்கள் மளிகை கடைக்கு மிக அவசியம் தேவைப்படும். இந்த License நாம் வாங்கி வைத்துக் கொள்வதினால் நகராட்சி சம்பந்தமான உதவிகளை நாம் பெறமுடியும்.

(2). FSSAI License:

உணவு சார்ந்த பொருட்களை நாம் விற்பனை செய்கிறோம் என்றால் கண்டிப்பாக நாம் FSSAI License கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும். இந்த License-ஐ நாம் நமது ஊரில் உள்ள Health Department-ம் என்று பெற்று கொள்ளலாம். அல்லது இந்த FSSAI License-ஐ ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து பெற முடியும்.

இந்த License எதற்கு தேவைப்படும் என்றால் நாம் விற்பனை செய்யும் பொருட்கள் எஸ்பிரி ஆன பொருட்கள் இல்லை, தரமான பொருட்களை தான் விற்பனை செய்கின்றோம் என்பதற்கு தான் இந்த License. திடீரென்று உங்கள் மளிகை கடைக்கு Health Department-யில் இருந்து வந்தால் அப்பொழுது கண்டிப்பாக நம்மிடம் FSSAI License இருக்கிறதா என்று தான் கேட்பார்கள். ஆக, நாம் இந்த FSSAI License-ஐ வாங்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Read More : உங்களுக்கு இனிப்பு பிடிக்குமா..? அதிகமா சாப்பிடுவீங்களா..? இனி உஷாரா இருங்க..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

Tags :
Advertisement