கரண்ட் பில் அதிகமா வருதா..? இனி கவலை வேண்டாம்..!! இப்படி ஒரு வழி இருக்கு..!!
கரண்ட்டை தொட்டால்தான் ஷாக் அடிக்க வேண்டும் என்பதில்லை, கரண்ட் பில்லைப் பார்த்தால்கூட பலருக்கும் ஷாக் அடிக்கிறது. கோடை வெயில் கொளுத்தும் காலங்களில் மின்சாரத்தேவை அதிகமாகிறது. ஆனால், மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் பற்றாக்குறையும் ஒருபுறம் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், இதற்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் `பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana). இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் கரன்ட் பில் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம், அதோடு வருமானமும் பெறலாம்.
இந்த திட்டத்தின் மூலமாக வீட்டின் மின்கட்டணத்தை பூஜ்ஜியம் ஆக்கிவிடலாம். இத்திட்டத்தில் வீட்டு மேற்கூறையில் சோலார் பேனர்கள் பொருத்துவதற்காக அரசு சார்பில் ரூ.75,000 மானியம் வழங்கப்படுகிறது. தேவையான மின்சாரத்தை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, மீதமுள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்பனை செய்யவும் வழிவகை செய்கிறது. இதன் மூலம் மின்சார கட்டணத்தை நாம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. இதன் மூலமாக வருமானம் கிடைக்கும்.
மானியத் தொகை எவ்வளவு?
1 கிலோவாட் அமைப்பை நிறுவ 30,000 ரூபாய் (மாதம் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள்), 2 கிலோவாட் அமைப்பை நிறுவ 60,000 ரூபாய் (150-300 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள்), 3 கிலோவாட் அமைப்பை நிறுவ 78,000 ரூபாய் (300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள்) வரை மானியமாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதியானவர்கள்..?
மார்ச் 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட பத்திரிகை தகவல் பணியகத்தின்படி (PIB), திட்டத்தில் விண்ணப்பிக்க பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
* இந்திய குடியுரிமை
* சொந்த வீடு மற்றும் சோலார் பேனல் பொருத்த போதுமான மேற்கூரை இருக்க வேண்டும்.
* செல்லுபடியாகும் மின்சார இணைப்பு.
* சோலார் பேனல் அமைக்க முந்தைய மானியங்கள் பெறாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
* pmsuryaghar.gov.in என்ற போர்ட்டலில் மின்சார விநியோக நிறுவனம், நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை வழங்கி பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர் நுகர்வோர் எண் மற்றும் செல்போன் எண்ணை போட்டு, லாக் இன் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சோலார் பேனலை அமைக்க ஒப்புதல் கிடைத்தப்பின், பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் சோலார் பேனலை நிறுவ வேண்டும்.
* சோலார் பேனலை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் சப்ளை செய்பவர்களை விண்ணப்பிப்பவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
* சோலார் பேனலை நிறுவிய பின், சோலார் விவரங்களை சமர்ப்பித்து நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நெட் மீட்டரை நிறுவியவுடன் டிஸ்காம் அதிகாரிகள் பரிசோதித்ததும், கமிஷன் சான்றிதழ் உருவாக்கப்படும்.
* பின்னர், 30 நாட்களுக்குள் மானியத்தைப் பெற வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை போர்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
* இத்திட்டத்தில் குடும்பங்கள் சேருவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை மிச்சப்படுத்துவதோடு, மின் விநியோக நிறுவனங்களுக்கு அதிகப்படியான மின்சாரத்தை விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.
* சோலார் அமைப்பை நிறுவ 2 லட்சத்தில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை மிகக் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Read More : வட்டியை கொட்டிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! மாத வருமானம் இவ்வளவு கிடைக்குமா..?