முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி Google Pay-இல் ரீசார்ஜ் செய்தால் தனி கட்டணம் வசூல்..!! எவ்வளவு தெரியுமா..?

07:14 AM Nov 24, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கூகுள் பே (Google Pay) மூலமாக மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட சில சேவைகளை பயன்படுத்துவோருக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

டிஜிட்டல் இந்தியாவில் உலகிற்கே முன்னோடியாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் யுபிஐ செயல்முறைகள் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன. இதன் மூலம் பணப்புழக்கம் மற்றும் அதனை கையாள்வதன் சிரமங்கள் மக்கள் மத்தியில் குறைந்துள்ளன. இந்தியாவில் இந்த யுபிஐ சேவையில் பேடிஎம், போன் பே மற்றும் ஜி பே உள்ளிட்ட செயலிகள் இணைந்துள்ளன. இவற்றில் பேடிஎம், போன்பே வழியில் குறிப்பிட்ட சேவைகளுக்கு சிறியளவிலான கட்டணத்தை வசூலிக்க கூகுள் பே முன்வந்துள்ளது.

பேடிஎம், போன்பே உள்ளிட்டவை தங்கள் வாயிலான சகல பணப் பரிவர்த்தனைகளுக்கும் சேவை அல்லது பயன்பாடுக் கட்டணத்தை பயனரிடமிருந்து வசூலித்து விடும். ஆனால், ஜிபே அவ்வாறு செய்யவில்லை. ஆனால், தற்போது மாற்றத்தை அமல்படுத்துகிறது. அதன்படி, மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில்களை கட்டுவது உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கு மிகச் சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

ரூ.100 வரையிலான ரீசார்ஜ் நடைமுறைகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. ரூ.101 முதல் ரூ.200 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.2 கையாளுகை வசதிக்கான கட்டணமாக ஜி பே வசூலிக்கும். அதற்கு மேலான தொகைகளுக்கு ரூ.3 வசூலிக்கும். இதன் மூலம் பேடிஎம், போன்பே வரிசையில் இந்த நடைமுறைகளை அமல்படுத்துவதில், ஜிபே செயலியின் யுபிஐ சேவையும் இணைகிறது.

Tags :
google payகட்டணம் வசூல்ரீசார்ஜ்
Advertisement
Next Article