முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி ஆயுஷ்மான் பாரத் இல்லை!… ஆரோக்கிய மந்திர்!… சுகாதார மையங்களின் பெயர் மாற்றம்!… மத்திய அரசு அறிவிப்பு!

06:39 AM Nov 27, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களின் பெயர்களை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, 'ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
Arogya Mandirஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்சுகாதார மையங்களின் பெயர் மாற்றம்மத்திய அரசு அறிவிப்பு
Advertisement
Next Article