முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இனி அட்வைஸ் இல்ல.. அரெஸ்ட் தான்’..!! 'கல்லூரியில் இருந்து நீக்கம்’..!! மாணவர்களுக்கு எச்சரிக்கை..!!

07:19 AM Nov 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை அவர்களின் கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கல்லூரிகளில் ஒருவருக்கொருவர் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக ரயில் நிலையங்களை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

இதில் சில மாணவர்களின் உயிர் பறிபோவதோடு, பயணிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சில பயணிகளும் காயமடைந்தனர். இதையடுத்து, தீவிர ரோந்து பணிகளை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கூறுகையில், “ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை. இதனால், கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Tags :
கல்லூரி மாணவர்கள்ரயில்ரயில் நிலையங்கள்ரயில்வே ஏடிஜிபி வனிதாவன்முறை சம்பவங்கள்
Advertisement
Next Article