”எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டியா”..? மனைவியுடன் உல்லாசமாக இருந்த கந்து வட்டிக்காரர் படுகொலை..!!
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே பி.டி.ஆர் காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (34) என்பவர் வட்டிக்கு பணம் வசூலிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்படி, கடன் கொடுத்தவரிடம் பணம் வசூலிக்க சென்றபோது, அனீஸ் (40) என்பவரது மனைவியுடன் பிரசாந்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்ட இருவரும், மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். மேலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளது.
இந்த விவகாரம் அனீஸுக்கு தெரியவந்த நிலையில், பிரசாந்தை கண்டித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று காலை பிரசாந்த் தனது இருசக்கர வாகனத்தில், கூட்டு நீதிமன்றம் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அனீஸ், தன்னுடைய மனைவியுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அனீஸ், தான் மறைத்து கொண்டு வந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து, பயத்தில் தப்பியோடிய பிரசாந்த், ஒரு லாட்ஜ்-க்குள் நுழைந்தார். ஆனாலும், விடாமல் துரத்திச் சென்ற அனீஸ், பிரசாந்தை கொலை செய்துவிட்டு தப்பினார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நீதிமன்றப் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அனீஸை வலைவீசி தேடி வருகின்றனர்.