சரசரவென சரிந்த காய்கறிகள் விலை.. ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை இவ்வளவு தானா..?
பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவு மக்கள் காய்கறிகளை வாங்கியதால் பச்சை காய்கறிகளின் விலை உச்சத்தை அடைந்தது. அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்கு அதிகரித்தது. ஏற்கனவே ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கிய காய்கறிகள் ஒரு கிலோ 80ரூபாயை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் காய்கறிகளின் விலையானது சரிய தொடங்கியது. இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மக்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்கின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையானது குறைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read more ; புதிய உச்சம்.. வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை..!! – எவ்வளவு தெரியுமா?