For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இனி வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி'..!! அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட் நியூஸ்..!!

Minister Chakrabani said the ration products will be delivered soon.
12:14 PM Jul 20, 2024 IST | Chella
 இனி வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி      அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட் நியூஸ்
Advertisement

ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 9,900 கடைகள் பகுதி நேரமாகவும், மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேஷன் பொருட்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால், விரைவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

டோர் டெலிவரி செய்ய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும். இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும். இதற்காக 6 மில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். இதுபோன்று டோர் டெலிவரி செய்யும் திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் இருந்தபோது, தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் காட்டியது.

அதன்படி, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு செல்லும் நடைமுறைக்காக டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதால் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டது.

அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருளை வழங்கும் திட்டத்தை முதலில் முழங்கியவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். எனவே, ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்பட்டால் அவருடைய கனவு நனவாகும்.

Read More : மனைவி, குழந்தையை பற்றி இசையமைப்பாளர் இமான் இப்படி சொல்லிட்டாரே..!! மீண்டும் பஞ்சாயத்தா..?

Tags :
Advertisement