For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடி தூள்..! இனி இந்த பதிவு சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்கப்படாது...! மத்திய அரசு அறிவிப்பு

No fee will be charged for issuance of this Registration Certificate anymore
06:07 AM Aug 12, 2024 IST | Vignesh
அடி தூள்    இனி இந்த பதிவு சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்கப்படாது     மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

'வைப்புச் சான்றிதழ்' சமர்ப்பிப்பதற்கு எதிராக வாகனம் பதிவு செய்யப்பட்டால், பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது.

Advertisement

பழைய, தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் (ஆயுள் வாகனங்கள்) வாகனங்களை கழிவு (ஸ்கிராப்) செய்ய, வாகன உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக, வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின் கீழ், போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் 25% வரை சலுகை வழங்க 2021 அக்டோபர் 5 தேதியிட்ட GSR 720 (E) ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

04.10.2021 தேதியிட்ட GSR 714 (E), 'வைப்புச் சான்றிதழ்' சமர்ப்பிப்பதற்கு எதிராக வாகனம் பதிவு செய்யப்பட்டால், பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. 23.09.2021 தேதியிட்ட GSR 653 (E) மூலம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (வாகன ஸ்கிராப்பிங் வசதியின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகள், 2021 (அவ்வப்போது திருத்தப்பட்டபடி) பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளை (RVSFs) நிறுவுவதற்கான விதிகளை வழங்குகிறது. மேற்கூறிய விதிகளின் துணை விதி 10-ன் துணை விதி (xix), ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தின் அபாயகரமான பாகங்களை அகற்றுவது அல்லது மறுசுழற்சி செய்வது அல்லது அகற்றுவது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுவதை RVSF உறுதி செய்யும் மற்றும் AIS-129-ன் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மை.

இந்த விதிகளின் விதி 14 இன் படி, பதிவுசெய்யப்பட்ட ஸ்கிராப்பர் வருடாந்திர ஒழுங்குமுறை மற்றும் இணக்க தணிக்கை மற்றும் ஆர்.வி.எஸ்.எஃப்-ன் வெகுஜன ஓட்ட அறிக்கையை மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி 126-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு ஏஜென்சியாலும் நடத்த வேண்டும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 2023-ல் ஆயுட்காலம் முடிவடையும் வாகனங்களைக் கையாள்வதற்கும், அகற்றுவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 30.01.2024 தேதியிட்ட S.O. 367 (E) மூலம், ஆயுட்காலம் முடிவடையும் வாகனங்கள் (மேலாண்மை) விதிகள், 2024-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இந்த விதிகள் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் (EPR) கட்டமைப்பை வழங்குகிறது, அங்கு வாகனங்களின் உற்பத்தியாளர்கள் (இறக்குமதியாளர்கள் உட்பட) RVSF களில் ஆயுட்கால வாகனங்களை அகற்றுவதற்கு பொறுப்பாவார்கள்.

பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை, விஞ்ஞான ரீதியிலான ஸ்கிராப்பிங் செயல்முறை மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் குறைப்பதை வாகன அழிப்புக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜி.எஸ்.ஆர் 653 (இ) மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை (அவ்வப்போது திருத்தப்பட்டபடி) அமைப்புசாரா / முறைசாரா துறையை, முறையான ஸ்கிராப்பிங் சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைக்க வகை செய்கிறது. இதுவரை நிறுவப்பட்ட 62 ஆர்.வி.எஸ்.எஃப் களில், 22 எண்கள் முன்னாள் முறைசாரா ஸ்கிராப்பர்களால் நிறுவப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement