For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஸ்டாலினுக்கு, மோடிக்கு வாழ்த்து இல்லை"!! ஆந்திர தலைவர்களுக்கு மட்டும்தான்!! வாழ்த்துவதில் நடிகர் விஜய் ட்விஸ்ட்

05:40 AM Jun 05, 2024 IST | Baskar
 ஸ்டாலினுக்கு  மோடிக்கு வாழ்த்து இல்லை    ஆந்திர தலைவர்களுக்கு மட்டும்தான்   வாழ்த்துவதில் நடிகர் விஜய் ட்விஸ்ட்
Advertisement

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 2 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன.மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது

பாஜக கூட்டணி 289 இடங்களையும் ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் 235 தொகுதிகளையும் பெற்றுள்ளன.அதேபோல் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் . ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

அதாவது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அதிகபட்சமாக 136 தொகுதிகளை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ஜெகன் கட்சி இப்போது வரை 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 136 தொகுதிகளை பெற்றுள்ளது. அதோடு ஆளும் கட்சியாக இருந்த ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸால் இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். உங்கள் கட்சியின் வெற்றிக்கும், ஆந்திரா சட்டசபை தேர்தலில் 2 வது பெரிய கட்சியாக மாறியதற்கும் வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கான உங்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிக்கு பாராட்டுகள். மனமார்ந்த வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.

இன்னொரு பதிவில், ‛‛தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். ஆந்திராவை வழிநடத்துவதற்கான சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்ற வெற்றிக்கும், உங்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியின் கீழ் ஆந்திரா மக்கள் பெரும் முன்னேற்றம் அடையவும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை நடிகர் விஜய் தமிழகத்தில் 40 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி அல்லது மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட தனிப்பெரும் கட்சியாக நிலைத்து நிற்கும் பாஜக தலைவர் அல்லது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!

Tags :
Advertisement