”கோயில் கருவறைக்குள் எந்த ஜாதியினரும் போக முடியாது”..!! ”அது ராஜா சாராகவே இருந்தாலும் சரி”..!! நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இசைஞானி இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”இளையராஜா என்பவர் ஒரு இசைக் கடவுள். கடவுளுக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்று அவசியமே இல்லை.
இளையராஜா எங்கே போனாலும் அவரே ஒரு கடவுள். அவரே கோயில் தான். அவரை கோவிலுக்குள் விடவில்லை என்பது போன்ற சர்ச்சை வந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கருவறைக்குள் எந்த ஜாதியினரும் போக முடியாது. அது ராஜா சாராகவே இருந்தாலும் சரி, கஸ்தூரியாக இருந்தாலும் சரி. கூட இருப்பது என்னுடைய தெலுங்கு சொந்தங்கள்.
நான் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். அவர்கள் நினைத்தாலும் கருவறைக்குள் போக முடியாது. அது எந்த ஜாதியாக இருந்தாலும், பிராமணராக இருந்தாலும் போக முடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும் தான் போக முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அப்போ அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் போக முடியும். இதுதான் மேட்டர். இதைப் பிரித்து பேசுகின்ற இந்த வன்மப்போக்கை கண்டித்து தான் நவம்பர் 23ஆம் தேதி கஸ்தூரி பேசினாள். அதையே தான் திரும்பவும் பேசுகிறாள்” என்றார்.