சற்றுமுன்...! வடகிழக்கு பருவ மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண் அறிமுகம்...!
வடகிழக்கு பருவ மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண்ணுக்கு அழைக்க கூடுதலாக 150 இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனை கூட்டம் நடத்தினார்; வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். நீர் தேங்கும் இடங்களில் அதனை உடனடியாக வெளியேற்ற 913 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்கள் பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கடந்த மழையின்போது அதிகம் தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. 167 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1000க்கும் மேற்பட்ட உயரமான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் உயரமான மரக்கிளைகளை வெட்ட உத்தரவிட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண்ணுக்கு அழைக்க கூடுதலாக 150 இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர் வரையும், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர் பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பருவமழை காலகட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகள் தான் பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மாவட்டத்தில் மொத்தம் 283 இடங்கள் பேரிடர் அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பேரிடர்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றது.