முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கைலாசா டு அயோத்தி.." ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நித்தியானந்தா.! புதிய அறிவிப்பால் பரபரப்பு.!

07:02 PM Jan 21, 2024 IST | 1newsnationuser7
Advertisement

அயோத்தியின் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சிக்காக அயோத்தி நகர் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதால் அயோத்தி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே அயோத்திக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா சுவாமிகள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக சேவை செய்து வந்த இவர் பிரபலமான தமிழ் நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஜாமீனில் வெளிவந்த பின் இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருந்தார். தனது நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததாகவும் கூறி வந்தார் . இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் நித்தியானந்தா அந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது 'X' வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் " அயோத்தியில் நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ஸ்ரீ ராமரின் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இந்து மதத்தின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரான பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் சுவாமிகள் வருகை தர இருக்கிறார்" என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நித்தியானந்தாவின் இந்த திடீர் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
ayodhyakailasaNityanandhaParticipationRam Mandhir Consecration
Advertisement
Next Article