For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இந்தியா'-வை கழற்றிவிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.! மீண்டும் பாஜகவில் ஐக்கியம்.!

11:52 AM Jan 28, 2024 IST | 1newsnationuser7
 இந்தியா  வை கழற்றிவிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்   மீண்டும் பாஜகவில் ஐக்கியம்
Advertisement

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில ஆளுநரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். அதன்படி அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். இவர் பதவி விலகியதால், பீகாரில் அரசியல் கூட்டணிகள் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

Advertisement

2022ஆம் ஆண்டு முதல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து நடைபெற்று வந்த நிதிஷ்குமார் அவர்களது ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அவர் பா.ஜ.கவில் இணைந்து மீண்டும் ஒன்பதாவது முறையாக பீகாரின் முதலமைச்சராக பதவியேற்பார் என்று கருதப்படுகிறது. இதனால் மறுசீரமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவையுடன் இணைந்து ஜனதா தளம் புதிய ஆட்சியை அமைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது, எதிர்க்கட்சியின் முன்னணியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் இன்று காலை ஜனதா தளம் சட்டமன்ற கூட்டத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதே வேளையில் பாஜக மற்றும் அதன் எம்.பிக்கள் பாட்னாவில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை குறித்து ஆலோசிப்பதற்காக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement