For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிதீஷ் குமார் முதல்வர் பதவி ராஜினாமா..! பீகாரில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா?

09:58 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
நிதீஷ் குமார் முதல்வர் பதவி ராஜினாமா    பீகாரில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா
Advertisement

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக முடிவு எடுத்தது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக இருக்கும் நிதீஷ் குமார் கூட்டணியை கலைத்துவிட்டு பிஜேபியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . மேலும் பீகார்  அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

அனைத்து எம்எல்ஏ-களையும் பாட்னா நகருக்கு வருமாறு முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருக்கிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபையை  கலைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் விஜய் சௌத்ரி மற்றும் லாலன் சிங் போன்ற மூத்த தலைவர்களுடன்  ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்திய கூட்டணியில் இருந்து அதன் நிறுவனரான நிதிஷ்குமார்  பிரிந்து செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன . மேலும் ராஷ்டிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியை முறித்து பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பீகார் அரசியலில் ஏற்பட இருக்கும் மாற்றம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த போவதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொள்ளப் போவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமார் இணைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் நிதீஷ் குமார் உடனான கூட்டணியை காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆர்ஜேடி செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

நிதீஷ் குமாரின் இந்த திடீர் முடிவு இந்தியா கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்த நிலையில் தற்போது நிதீஷ் குமார் பிஜேபியுடன் சேர இருப்பதாக வெளியான தகவல்கள் எதிர்க்கட்சிக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது இந்தியக் கூட்டணியில் தொடர்ந்து மோதல் நிலை நீடித்து வருகிறது. நிதீஷ் குமார் ஆகஸ்ட் 8 2022 இல் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து பீகார் மாநில முதல்வராக எட்டாவது முறையாக பதவியேற்றார். இதன் பிறகு பிஜேபியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டாவர் ஆர்ஜேடி உடன் கூட்டணி சேர்ந்தார். அரசியலில் எப்போதும் முன்னுக்கு பின்னான பேச்சுக்கள் மற்றும் வழக்கத்தை கடைப்பிடிப்பதை கொள்கையாகக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார். 2014ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த அவர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். 2015 ஆம் வருட பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றார் .

அதே வருடம் மீண்டும் கூட்டணியை முறித்து பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். 2015 முதல் பிப்ரவரி 2020 வரை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டார் நிதீஷ் குமார். மேலும் பாரதிய ஜனதா கட்சியும் அவர் முதல்வராக இருப்பதை விரும்பியது. இந்த காலகட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து ஆகஸ்ட் 9 2022-ல் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். இருப்பினும், இந்த கூட்டணி 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

லாலு யாதவ் நிதீஷ் குமார் உடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கூட்டணி ஆட்சியை காப்பாற்ற தங்களால் முடிந்த எல்லாம் முயற்சிகளையும் ராஷ்டிய ஜனதா தள கட்சி மேற்கொள்ளும் என செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம்கள் மற்றும் யாதவ் சமுதாயம் மக்களின் வாக்கு சதவீத அடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு மிகவும் பின்னடைவாக அமையும். நிதீஷ் குமாருடன் இணையும் போது பெண்கள் வாக்குகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை பெறுவதால் வெற்றி பெறலாம் என திட்டம் தீட்டுகிறது ஆர்ஜேடி. மேலும் இப்போது தங்களது கூட்டணி ஆட்சிக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அந்தக் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளரான வினோத் தாவ்டே பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாம்ராட் சவுத்ரி, சுஷில் மோடி, நித்யானந்த் ராய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சின்ஹாவும் டெல்லி செல்லவுள்ளார்.

நிதீஷ் குமாரின் புதிய அரசியல் நடவடிக்கையால் ராஷ்ட்ரிய ஜனதாதன கட்சியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேஜஸ்வி மற்றும் ஆர்ஜேடி மூத்த தலைவர்களும் அடங்குவர். தேஜ் பிரதாப் யாதவ், போலா யாதவ், தன்வீர் ஹாசன், தலைமை செய்தி தொடர்பாளர் சக்தி யாதவ், எம்எல்ஏ மனோஜ் யாதவ், ஜெய்பிரகாஷ் யாதவ் போன்ற பெரிய தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

Tags :
Advertisement