அடிமடியிலேயே கையை வைத்த நிதீஷ்!… நிபந்தனைகளில் பிடிவாதம்!… அரண்டு போன பாஜக!... சந்திரபாபு நாயுடுவின் திட்டம் என்ன?
Nitish Kumar: 4 கேபினெட் அமைச்சர்கள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, முன்கூட்டியே மாநிலத் தேர்தல், மாநிலத்தின் திட்டங்களுக்கான பல லட்சம் கோடி நிதியாதாரம் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நிதிஷ் குமார் பாஜகவை அலறவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில் டெல்லியில் நேற்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தை சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.
அதன்படி, இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி ஜூன் 8ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், ஜூன் 8ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக்கொள்கிறார்.
இந்தநிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் கைவசமிருக்கும் 12 எம்பிக்கள் பாஜகவுக்கு அவசியம் என்பதை நன்குணர்ந்த நிதிஷ் குமார் தனது நிபந்தனைகளில் பிடிவாதமாக இருக்கிறார். அனைத்துமே பீகாரின் நலம் நாடும், அதன் எதிர்கால வளர்ச்சிக்கானவை என்பதால், தனது நிபந்தனைகளில் நிதிஷ் குமார் திடமாக இருக்கிறார். 4 கேபினெட் அமைச்சர்கள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, முன்கூட்டியே மாநிலத் தேர்தல், மாநிலத்தின் திட்டங்களுக்கான பல லட்சம் கோடி நிதியாதாரம் உள்ளிட்டவை நிதிஷ் குமார் நிபந்தனைகளின் பட்டியலில் இருக்கின்றன.
நிதிஷ் குமாருக்கு அவரது பழைய நண்பர்களான ’இந்தியா கூட்டணி’யின் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதும் பாஜகவை கிலியூட்டி வருகிறது. எனவே தனது அரசியல் பேரத்தில் நிதிஷ் குமார் மேலும் உறுதியாக இருக்கிறார். தான் கோரும் கேபினெட் அமைச்சர்களுக்கு ரயில்வே, ஜல்சக்தி, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பீகாருக்கு அத்தியாவசியமான துறைகளை நிதிஷ் கோரியுள்ளார். இவற்றைப் பெறுவதன் மூலமாக, பீகாரின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடமுடியும் என்பதோடு, மக்களின் ஆதரவால் மீண்டும் ஒருமுறை அவரால் அங்கே முதல்வராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!