பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!! வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம்..!!
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜன.31ஆம் தேதி தொடங்கி பிப்.13ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேதியில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதேபோல, இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 10ஆம் தேதி தொடங்கி ஏப்.4ஆம் தேதி முடிவடைகிறது.
முதல் நாளான ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து 8-வது முறையாக வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
குறிப்பாக, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு வருமான வரி உச்சவரம்பு குறித்து இருக்கிறது. தற்போது ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமான உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டுமென நடுத்தர பிரிவினர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.