For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி...! 35 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகர் மகன்...!

The son of an AIADMK leader who threatened and raped a 35-year-old woman.
06:30 AM Jan 18, 2025 IST | Vignesh
அதிர்ச்சி     35 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகர் மகன்
Advertisement

நெல்லையில் அதிமுக பிரமுகரின் மகன் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நெல்லை, தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நிர்வாக வேலைகளை அவரது மகன் முகம்மது சர்ஜின் (30) என்பவரும் கவனித்து வருவதால் அவர் அடிக்கடி 3 இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று வருவார்.நெல்லை டவுன், பாறையடியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலை செய்யும் திருமணமான 35 வயது பெண்ணை அவர் தவறான எண்ணத்தில் அணுகி உள்ளார். இதுகுறித்து அந்த பெண், கம்பெனியின் முதலாளி முகமது மீரானிடம் புகார் செய்தார், அதனால் அவர், முகமது சர்ஜினை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த முகமது சர்ஜின் அந்த பெண்ணை டவுன், பாறையடியில் உள்ள கம்பெனிக்கு வரவழைத்து தாக்கி, காயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த பெண் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பின் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement