For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Nirmala Sitharaman | ’தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை’..!! நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலை கவனிச்சீங்களா..?

10:34 AM Mar 28, 2024 IST | Chella
nirmala sitharaman   ’தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை’     நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலை கவனிச்சீங்களா
Advertisement

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று 12 மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. பாஜகவை பொறுத்த வரை மக்கள் தலைவர்கள், திரை பிரபலங்கள் என புத்தம் புது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழிசை சௌந்தரராஜன் கூட, தனது ஆளுனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் இணைந்துள்ளார். தமிழகம், ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்து பார்த்தேன். இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை. அதனால், நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தலைமையிடம் தெரிவித்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் அதிரடி உயர்வு..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Advertisement