#சற்றுமுன்: ஆளுநர் மாளிகை முன் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு...!
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரும்அவ்வப்போது நிறுத்தப்பட்டிருப்பார்கள். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி பெற்றவர்கள் கூட பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த கருக்கா வினோத் என்ற இளைஞர் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரணை செய்து வந்தது. எதற்காக அவர் குண்டு வீசினார் என்ற உண்மை பின்னணியை அறிவதற்காக என்.ஐ.ஏ இந்த வழக்கை கையில் எடுத்தது. இந்த நிலையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.