Pandemic: அடுத்த வைரஸ் எச்சரிக்கை!… எந்தநேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் தாக்கலாம்!… நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!
Pandemic: உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் தாக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மார்ச் 11, 2020 அன்று கொரோனா வைரஸ் என்றும் அழைக்கப்படும் கோவிட்-19 ஐ உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வைரஸ் பரவி உலகளவில் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். ஒருவழியாக, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து 2022ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்தநிலையில், ந்த நேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் தாக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான Sky news அறிக்கையின்படி, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் பரவி நோயை ஏற்படுத்தும் சாத்தியம் என்பது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனர் கிங்ஸ் கல்லூரியின் தொற்றுநோய் மருத்துவரான டாக்டர் நதாலின் மெக்டெர்மாட் கூறுகையில், ‛‛அடுத்து ஒரு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கலாம் அல்லது 20 ஆண்டுகளுக்குள் நடக்கலாம். மேலும் அதன் தாக்கம் என்பது நீண்டகாலம் இருக்கலாம். இதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் நாம் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
புவி வெப்பமடைதல் மற்றும் காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் பரவி நோயை ஏற்படுத்தும் சாத்தியம் என்பஅதிகமாக உள்ளது. குறிப்பாக அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவில் மரங்களை வெட்டுவதன் மூலம் விலங்கு, பூச்சிகள் மனிதர்களை நெருங்கி வாழ தொடங்குகின்றன. இதனால் நோய் பாதிப்பு என்பது ஏற்படலாம்’’ என தெரிவித்துள்ளார்.