For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த அதிர்ச்சி..!! டெல்லி, உபி-யில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்..!!

05:21 PM Nov 06, 2023 IST | 1newsnationuser6
அடுத்த அதிர்ச்சி     டெல்லி  உபி யில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்     பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்
Advertisement

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்படுகிறது.

Advertisement

நேபாளத்தில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 ரிக்டரில் பதிவாகி இருந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நேபாளத்தில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதி. இதனால் ஜாஜர்கோட், ருக்கும் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் பெரும் சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் 4.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.6 அளவுகோலாக பதிவாகியுள்ளது.

கடந்த 3 நாட்களில் இது 2-வது முறையாகும். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்படுவதால் வட இந்திய மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement