நந்தியிலிருந்து இரத்தம் வடியும் அதிசய கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?
பொதுவாக சிவன் கோயில் என்றாலே அங்கு நந்தியின் சிலை கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த சிவன் கோயிலுக்கும் தனி சிறப்பு இருந்து வருகிறது. அதாவது சிவன் கோயிலின் வாசலில் அமைந்துள்ள நந்தியிலிருந்து நூறாண்டுகளாக இரத்தம் போன்ற திரவம் வருகிறது. இதைக் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இலங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய சிவன் கோயில். இந்த சிவன் கோயிலின் வாசலில் நந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலையிலிருந்து இரத்தம் போன்ற திரவம் வடிந்து கொண்டே இருக்கிறது. பார்ப்பதற்கு ரத்தம் போன்றும், தொட்டுப் பார்த்தால் எண்ணெயிலான திரவம் போன்றும் இருக்கும் இந்த திரவத்தை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நெற்றியில் பூசி கொள்கின்றனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயிலில் அப்போதிலிருந்து இப்போது வரை விடாமல் இந்த திரவம் வடிந்து கொண்டே இருப்பது பலருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. இந்த நந்தி சிலையை அதன் இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி வைத்தும் இந்த சிலையில் இருந்து திரவம் வடிவது நிற்கவில்லை. இதன் காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது. மேலும் இந்த திரவத்தை நெற்றியில் பூசிக்கொள்ளும் பக்தர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் வாழ்வார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.