For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் கஷ்டங்கள் அதிகரித்து, வறுமை வாட்டுகிறதா…! மணி பிளான்ட் வேர் பரிகாரம்..! பண கஷ்டம் தீரும்..!

06:23 AM Feb 14, 2024 IST | 1newsnationuser5
வீட்டில் கஷ்டங்கள் அதிகரித்து  வறுமை வாட்டுகிறதா…  மணி பிளான்ட் வேர் பரிகாரம்    பண கஷ்டம் தீரும்
Advertisement

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. பணத்திற்காக தான் தினமும் ஓடி கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் ஐஸ்வர்யங்கள் வீட்டில் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மணி பிளான்ட் செடி வளர்த்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.

Advertisement

இவ்வாறு வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்க வைக்கும் மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்க ஆரம்பித்த பிறகு தான் கஷ்டங்கள் அதிகரித்து, வறுமை வாட்டுகிறது என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அந்த வீட்டில் வளர்க்கும் மணிப்ளாண்ட் செடியும் வாடி வதங்கி இருக்கும். ஒரு சில செயல்முறைகளை செய்வதன் மூலம் மணி பிளான்ட் செடியும் நன்றாக வளரும். வீட்டின் கஷ்டமும் குறைந்து பணவரவு பெருகும்.

மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைத்து வளர்ப்பதை விட வீட்டிற்குள்ளே பச்சை அல்லது நீல நிறம் கொண்ட கண்ணாடி குவளையில் வளர்க்க வேண்டும். முக்கியமாக மணி பிளான்ட் செடி வைக்கும் போது வீட்டில் வடகிழக்கு பகுதியில் வைக்கக் கூடாது. இவ்வாறு வைப்பது செடியை வளரவிடாமல் செய்து வீட்டில் வறுமையை ஏற்படுத்துகிறது.

மணி பிளான்ட் செடியை முதன்முதலாக வீட்டில் வைக்கும் போது புதன்கிழமை அன்று வாங்கி வைக்க வேண்டும். அடுத்த புதன்கிழமையில் இந்த மணி பிளான்ட் செடியின் வேரின் ஒரு பகுதியை வெட்டி மஞ்சள் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பின்பு சிவப்பு நிற துணியில் நாணயத்துடன் சேர்த்து பணம் வைக்கும் இடத்தில் முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணம் எப்போதும் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். வீண்விரயம், நஷ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

முழு நம்பிக்கையுடன் கடவுளை நினைத்து மனதார வேண்டி இந்த பரிகாரத்தை செய்து வரும் போது கண்டிப்பாக பணவரவு அதிகரிக்கும். மேலும் இந்த மணி பிளான்ட் செடியின் வேர் பரிகாரத்தை புது செடி வாங்கி தான் செய்ய வேண்டும். பழைய செடியின் வேர் வைத்து செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement