உங்களுடைய குலதெய்வம் ஒரு பெண் தெய்வமா.? உங்களுக்கு தான் இந்த செய்தி.!?
பொதுவாக நம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல தெய்வத்தின் வழிபாட்டு முறை இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு குலதெய்வமாக பெண் தெய்வங்கள் இருந்து வரும். காளி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தினை வழிபட்டு வந்தாலும், மதுரை மீனாட்சி அம்மனை இஷ்ட தெய்வமாக வணங்கினாலும், திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மனை தாயாக வழிபட்டு வந்தாலும், மேற்கு வங்காளத்தில் பிரபலமாக இருக்கும் பவதாராணியை வழிபட்டு வந்தாலும்,
கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை, செல்லியம்மன், காமாட்சி அம்மன், அங்காள பரமேஸ்வரி, பத்ரகாளி, கன்னியாகுமரி அம்மன், பவானி அம்மன் போன்ற எந்த பெண் தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வந்தாலும் இவர்களுக்கெல்லாம் மூத்த தெய்வமாக இருந்து வரும் லலிதாம்பிகையை கண்டிப்பாக கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமீயச்சூர் கோயில். இக்கோயிலில் அமைந்துள்ள லலிதாம்பிகை பெண் தெய்வங்களுக்கெல்லாம் மூத்த தெய்வமாக கருதப்பட்டு வருகிறார். இவரை வழிபடுவதன் மூலம் குலதெய்வ வழிபாடு முழுமை அடையும். குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வர செய்யும் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் பௌர்ணமி நாள் அல்லது நட்சத்திர பிறந்தநாள் அன்று திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதிக்கு வந்து 64 முறை சுற்றி வலம் வந்து மனமுருகி வேண்டினால், கேட்ட வரம் கொடுக்கும் தெய்வம் என்று கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் லலிதாம்பிகையையும், குலதெய்வத்தின் பெயரையும் உச்சரித்து வேண்ட வேண்டும். லலிதாம்பிகையுடன் மேகநாதர் தெய்வத்தையும் வேண்டுவது நல்லது.