For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே உலகம்தான்!… தனித்துவமாக காட்டும் நேரங்கள்! 2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு - கடைசி நாடு எது தெரியுமா!...

08:53 AM Jan 01, 2024 IST | 1newsnationuser3
ஒரே உலகம்தான் … தனித்துவமாக காட்டும் நேரங்கள்  2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு   கடைசி நாடு எது தெரியுமா
Advertisement

2024 ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் மற்றும் கடைசி நாடுகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

உலகம் முழுவதும் 2024 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். அதாவது, உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபிக் பெருங்கடலில் உள்ள ஓசியானியா பகுதியில் இருக்கும் கிரிபாடி என்ற நாடு தான் புத்தாண்டை வரவேற்றது.

இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் என்ற நகரை அடிப்படையாக கொண்டு தான் உலக நாடுகள் நேரத்தை பின்பற்றி வருகின்றன. இதை GMT - Greenwich Mean Time என்று அழைப்பர். இங்கிலாந்தில் தற்போதைய நேரத்தை காட்டிலும் இந்தியாவில் 5 மணி 30 நிமிடங்கள் கூடுதலாக இருக்கும். அதுவே இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷ்யாவின் கடைசி பகுதி என மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தால் நேரம் அதிகமாகி கொண்டே செல்லும். அப்படி பார்த்தால் கிரீன்விச் சராசரி நேர அட்டவணையில் கிழக்கில் கடைசியாக இருக்கும் நாடுகள் தான், நேரத்தில் முன்னிலையில் இருக்கும். அவர்களுக்கு தான் புத்தாண்டு முதலில் பிறக்கும்.

இதையடுத்து நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு அங்கு 2024ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதை வான வேடிக்கைகள் உடன் பொது இடத்தில் ஒன்று கூடி மக்கள் கொண்டாடினர். ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கொண்டு, இனிப்புகளை பரிமாறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக இதற்கான கவுண்ட்டவுன் பிரம்மாண்ட கோபுரங்களில் லேசர் ஒளி மூலம் காண்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா என வரிசையாக புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் உலகிலேயே கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் நாடுகள் யார் என்று பார்த்தால் அமெரிக்கா தான்.

அதாவது, அமெரிக்காவிற்கு சொந்தமான ஹவ்லேண்ட் மற்றும் பாகெர் தீவுகள் தான். இவை தான் கிரீன்விச் சராசரி நேரத்துடன் ஒப்பிடுகையில் கிழக்கில் இருந்து மேற்காக கடைசி இடத்தில் அமைந்துள்ளன. இங்கு இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஒரே உலகம் தான். ஆனால் நேரம் எப்படி எல்லாம் ஒவ்வொரு நாட்டையும் தனித்துவமாக காட்டுகிறது என்பதை நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Tags :
Advertisement