முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே எச்சரிக்கை.! புதிய வைரஸ்.! அடுத்த உயிர் கொல்லி நோய் 'அலாஸ்காபாக்ஸ்'.! 'Alaskapox' மரணத்தை விளைவிக்குமா.?

06:49 PM Feb 12, 2024 IST | 1newsnationuser4
Advertisement

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், "மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால் விழிப்புடன் இருப்பது அவசியம். நாங்கள் இது குறித்த ஆராய்ச்சியை செய்து வருகிறோம். இதற்கான அறிகுறிகளையும், அலாஸ்காபாக்ஸ் வைரஸை பற்றியும் விரைவில் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

வெறும் ஏழு பேருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட இந்த நோய்க்கு, அந்த முதியவர் முறையாக சிகிச்சை பெற்று வந்த போதிலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இறந்த முதியவருக்கு நோய் எதிர்ப்பு குறைபாடு இருந்தமையால் அவர் உயிர் இழந்திருக்க கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த முதியவர் தனியாக காடுகளில் வாழ்ந்திருக்கிறார். சமீபத்தில் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆயினும் இந்த வைரஸ் தொற்று அவருக்கு எவ்வாறு வந்தது என்று ஆய்வு செய்து வந்தனர்.

அவர் வளர்த்த பூனையின் மூலமாக இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த பூனை, அந்த காட்டில் இருந்த பல சிறிய பாலூட்டிகளை வேட்டையாடி உண்டிருக்கிறது. அந்தப் பூனையையும் ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதற்கு எந்த வைரஸ் தொற்றும் இருக்கவில்லை. ஆனால் அந்த பூனை அவரைக் கீறிய சில நாட்களில், அந்த முதியவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதனால் இந்த வைரஸ் தொற்று அந்த பூனையின் நகங்களின் வழியாக பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் அந்த முதியவரை ஆய்வுக் குட்படுத்திய போது அவருக்கு கௌபாக்ஸ் இருந்தது தெரியவந்தது. நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கூடுதல் சோதனைக்கு அவர் உட்படுத்திய போது, அவருக்கு அலாஸ்காபாக்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சிறுநீரகமும், சுவாசமும் செயலிழந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

பெரியம்மை, குரங்கு மற்றும் கௌபாக்ஸ் போன்ற அதே இனத்தில் இருந்து, இரட்டை இழை-டிஎன்ஏ அலாஸ்காபாக்ஸ் வைரசும் வருகிறது. இது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு தொற்றுவதில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும் பாதிக்கப்பட்டவருக்கு தோலில் புண்கள் இருந்தால், அதன் மூலமும் பரவக்கூடும்.

சிறிய பாலூட்டிகளில் பொதுவாக காணப்படும் இந்த வைரஸ், மனிதனிடம் முதன் முதலாக 2015இல் கண்டுபிடிக்கப்பட்டது. தோலில் புண்கள், நிணநீர் கணுக்கள் மற்றும் மூட்டுகளில் வீக்கம், தசை வலி போன்றவற்றை இதற்கான அறிகுறிகள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இது பெரிய ஆபத்துக்களை விளைவிக்கலாம்.

Tags :
AlaskapoxcatdeathExperimentsvirus
Advertisement
Next Article