தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்..? பாதிப்புகள் பயங்கரமா இருக்கும்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் புயலாக வலுபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த தின நாட்களாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் (நவம்பர் 19) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வரும் 23ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய கூடும் என்று சொல்லப்படுகிறது. அதுவரை தற்போது உள்ளதுபோல மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், அது புயலாக மாறுமா என்பதை வரும் நாட்களில் தான் உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளது.
அப்படி புயல் உருவாகும்பட்சத்தில், அது தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை முதல் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.