For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாடகை வீட்டில் இருந்தவர் கொலை; கள்ளக்காதலிக்காக ஹவுஸ் ஓனர் செய்த கொடூர சம்பவங்கள்..

house-owner-killed-2-people-for-illicit-relationship
05:35 PM Nov 19, 2024 IST | Saranya
வாடகை வீட்டில் இருந்தவர் கொலை  கள்ளக்காதலிக்காக ஹவுஸ் ஓனர் செய்த கொடூர சம்பவங்கள்
Advertisement

கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது வீட்டில் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இளங்கோவனின் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவரது பெண் தோழி கலைவாணி ஆகிய இருவரை கைது செய்தனர். இளங்கோவனின் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ், தனது மனைவி விஜயலட்சுமியுடன் வாகரயாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமிர்தராஜுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அவரது மனைவி விஜயலட்சுமி கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அமிர்தராஜ், அவரது மனைவியை கொலை செய்ய, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார். அதன் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து லாரியை ஏற்றி மனைவியை கொன்றுவிட்டார். மேலும், லாரி மோதிய விபத்தில் தனது மனைவி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மனைவி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளார். பின்னர் தனது மனைவியின் தொல்லை இல்லாமல், பெண் தோழி கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமிர்தராஜ் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், இளங்கோவன் வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அமிர்தராஜ் இளங்கோவனை வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன், மனைவியை லாரியை ஏற்றி கொலை செய்தது பற்றி நான் போலீஸிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அமிர்தராஜ், கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொன்றுள்ளார். இதையடுத்து, போலீசார் அமிர்தராஜ், கலைவாணி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கூலிப்படையை சேர்ந்த அமிர்தராஜ், மைக்கேல் புஷ்ப ராஜ், ஆரோக்கியசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது.

Read more: எச்சரிக்கை!!! இனி யாருக்கும் லிப்ட் கொடுக்க வேண்டாம்… கோவையை அதிர வைத்த சம்பவம்..

Tags :
Advertisement