இனி வாடகை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்..!! - வீட்டு வாடகைக்கான புதிய விதிகள் அமல்
பணி நிமித்தம் காரணமாக சொந்த ஊரை விட்டு இடம்பெயரும் மக்கள் அவர்கள் செல்லும் ஊரில் வாடகைக்கு தான் வீட்டை தேடுகின்றனர். எப்படி ஒவ்வொன்றிற்கும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கென்றும் சில சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்க்கு நாம் அட்வான்ஸ் பணம் கொடுப்பதிலும் சில சட்டங்கள் உள்ளது, அதாவது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர்.
ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் வாடகைதாரர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இதுபோன்ற சட்டங்கள் குறித்து வாடகைதாரர்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நகரில் வாடகை வீடு என்பது ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. அதில் இருந்து மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த நிலையில், மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன, இந்த புதிய விதிகளின் நோக்கம் வரி ஏய்ப்பைத் தடுப்பதும், வாடகை வருமானத்தை முறையாக அறிவிப்பதும் ஆகும். இந்த புதிய விதிகளைப் பற்றி பார்க்கலாம்.
கட்டாய வரி அறிவிப்பு : நில உரிமையாளர்கள் இப்போது தங்கள் வாடகை வருவாயை "வீடு மூலம் வருமானம்" என்று அறிவிக்க வேண்டும். வரி ஏய்ப்பு வழக்குகளை குறைப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம். அனைத்து நில உரிமையாளர்களும் வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். வரிகளைத் தவிர்ப்பதற்காக வாடகை ஒப்பந்தங்களை முறைப்படுத்தாதது போன்ற முன்னர் இருந்த நடைமுறைகள் இனி செயல்படுத்தப்படாது. முழு வாடகை வருமானத்தை அறிவிக்கத் தவறினால் குறிப்பிடத்தக்க அபராதங்கள் விதிக்கப்படலாம்.
Read more ; முதல் நாடாக 6ஜியை களமிறக்கும் இந்தியா..!! இது பிரதமரின் ஆசையாம்..!! எப்போது வருகிறது..?