முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’Pornhub’ உள்ளிட்ட ஆபாச இணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இனி இது ரொம்ப முக்கியம்..!!

07:45 AM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தற்போது அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளன. இதனால் இணையதளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏராளமான ஆபாச இணையதளங்களும் செயல்பாட்டில் உள்ளன. Pornhub, Xvideos மற்றும் Stripchat உள்ளிட்ட ஆபாச இணையதளங்களை அதிகமானவர்கள் பார்க்கின்றனர். இதற்கிடையே தான் இந்த 3 இணையதளங்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. அதாவது இந்த இணையதளங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement

அதாவது இணையதளங்களை பயன்படுத்தும் நபர்களின் வயது சரிபார்ப்பு உள்ளிட்ட விஷயங்களை மேம்படுத்த வேண்டும். குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. டீப்பேக் வீடியோக்களை தடுக்க வேண்டும். 18 வயது நிரம்பாதவர்கள் ஆபாச இணையதளங்கள் பார்ப்பதை தடுக்க வேண்டும். சட்டப்பூர்வமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு இணங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4 மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை 3 இணையதளங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் அந்த இணையதளங்ளின் உலகளாவிய வருமானத்தில் 6% வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தமட்டில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வலைதளங்களில் கூகுள், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றுக்கு இந்த புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் அறிவுறுத்தப்பட்டது. இத்தகைய சூழலில் தான் Pornhub, Xvideos மற்றும் Stripchat ஆகிய 3 ஆபாச இணையதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

Tags :
ஆபாச இணையதளம்ஐரோப்பிய ஒன்றியம்செல்போன்புதிய கட்டுப்பாடுகள்
Advertisement
Next Article