புதிய ரேஷன் கார்டு..!! 1.36 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!! காரணம் என்ன..? நீங்களும் இந்த தவறை செய்யாதீங்க..!!
புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தமிழ்நாடு அரசு கடுமையான விதிகளை பின்பற்றும் நிலையில், 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2.65 விண்ணப்பங்களில் சுமார் 1.36 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பதாரர்கள் ஒரே வீட்டில் வசிப்பவராகவும், சொந்த சமையலறை இல்லாமல் இருப்பவர்களாகவும் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும். அதேபோல், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போரின் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.
கள ஆய்வில் வசிக்கும் இடம் மோசடியாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வேறு எந்த காரணங்களுக்காகவும் நிராகரிக்க முடியாது. 4.26 லட்சம் விண்ணப்பங்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு வந்திருந்த நிலையில், அதில் 1.99 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு தேவை என்பதால் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிய ரேஷன் கார்டு அதிகம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை குறைந்தபட்சம் 5 மாதங்களுக்குப் பிறகே நடக்கிறது. சில இடங்களில் சிறிய தவறுகள் இருந்தால், உடனே அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதனால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.