முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பூமியை போல் உருவாகி வரும் புதிய கோள்’..!! ’அங்கு தண்ணீர் கூட இருக்காம்’..!! சுவாரஸ்ய தகவல்..!!

11:54 AM May 18, 2024 IST | Chella
Advertisement

பூமியில் தண்ணீர் எப்படி வந்தது என்ற கேள்விக்கே இதுவரை முடிவான பதில் எட்டப்படவில்லை. பூமிக்கு வெளியே எங்கெங்கெல்லாம் தண்ணீர் உள்ளது என்ற தேடலும் இதுவரை நிறைவடையவில்லை. ஆனால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் பயனுள்ள வகையில், ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisement

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியில் இருந்து 370 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பி.டி.எஸ்., 70 என்ற நட்சத்திரத்தையும், அதைச் சுற்றி வரும் இரு கோள்களையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரத்தில் இருந்து 16 கோடி கி.மீ. தூரத்தில் சுற்றி வரும் இந்த இரண்டு கோள்களும், ஒரே வட்டப்பாதையில் சுற்றுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆச்சரியமே இன்னும் குறையாத நிலையில், இக்கோள்களுக்கு அருகே மூன்றாவதாக பூமியைப் போன்ற பாறைக் கோள் ஒன்று உருவாகிக் கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் தண்ணீர் உள்ளதும் இந்த தண்ணீர், பனிக்கட்டிகளின் வடிவிலோ, ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் மூலக்கூறு வடிவிலோ இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் ஆவியாகி விடாமல் இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தண்ணீர் அமைந்துள்ள பகுதி, தூசுகளால் அல்லது நீராவியால் மூடப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : ”நான் சின்ன பொண்ணு… ரொம்ப வலித்தது”..!! “கோபத்துடன் தான் நடித்தேன்”..!! இதற்கெல்லாம் பிரபுதேவா தான் காரணம்..!!

Tags :
ஆய்வுகள்தண்ணீர்புதிய கோள்பூமிவிஞ்ஞானிகள்
Advertisement
Next Article