For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"வேலை முடிஞ்சுதுன்னா மூட்டையை கட்டிடனும்.." பாஸ் கால் பண்ணாலும் கட் தான்."..!! புதிய சட்டம் வந்தாச்சு..!

05:08 PM Feb 08, 2024 IST | 1newsnationuser7
 வேலை முடிஞ்சுதுன்னா மூட்டையை கட்டிடனும்    பாஸ் கால் பண்ணாலும் கட் தான்       புதிய சட்டம் வந்தாச்சு
Advertisement

தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பலவிதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பியும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .

Advertisement

செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த தொந்தரவு மேலும் அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு சென்ற பணியாளர்களிடம் அவர்களது ஓய்வு நேரங்களில் அவசர வேலைகளை முடிக்குமாறு கட்டளையிடும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இதனால் முறையான ஓய்வின்றி பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனை சரி செய்யும் வகையில் வேலை நேரம் முடிந்த பின்பு பணியாளர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் சட்டம் இயற்றியுள்ளன.ஃபிராண்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளில் வேலை முடிந்த பின்பு உயர் அதிகாரி அல்லது சக ஊழியரோ வேலை சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அந்த அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என சட்டம் இயற்றியிருக்கிறது.

இந்த சட்டம் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிலும் ஏற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுவதற்கும் ஆஸ்திரேலியாவில் இந்த புதிய சட்ட திருத்தம் சில நாட்களில் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement