For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாஸ்டேக் கட்டணத்தில் வந்த புதிய மாற்றம்..!! வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

If the passport was taken before 5 years, it should be removed immediately. You have until October 31 to change it
08:06 AM Oct 21, 2024 IST | Chella
பாஸ்டேக் கட்டணத்தில் வந்த புதிய மாற்றம்     வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Advertisement

நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்' கொள்கையை அறிமுகப்படுத்தியது. NPCI ஆகஸ்ட் மாதம் புதிய ஃபாஸ்டேக் விதிகளை அமல்படுத்தியது. ஃபாஸ்டேக் பயனர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றுவது முக்கியமானது. முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக் என்ற முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இது போக, ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது, இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் பாஸ்டேக் கார்டில் பணம் காலியானவுடன், தானாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சேர்ந்துவிடும்.

இதில், அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி, இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுத்தால் போதும். இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகியுள்ளது. உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.

தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை நடைமுறைக்கு வந்த நிலையில், இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால், அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 2 : பாஸ்டேக் 3 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டால், அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 3 : பாஸ்டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால், இரட்டை தொகை கட்ட வேண்டும்.

Read More : சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..? சம்பளம் எவ்வளவு..?

Tags :
Advertisement