'டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்' ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்!
மத்திய அரசு வாக்காளர் அட்டை பெறுவதை எளிமையாக்கியுள்ள வேளையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது. வருகிற ஜூன் 1, 2024 முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகள் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றனர். தனியார் வாகன பயிற்சி மையங்களுக்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி அராசு போக்குவரத்து அலுவலத்தில் தேர்வு எழுத வேண்டியதில்லை. தனியார் பயிற்சி மையங்களில் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜுன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தேர்வு நடத்துவதற்காக தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கான பயிற்சிக்காக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவர் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்களுக்கான பயிற்சி குறைந்தது 4 வாரங்கள், கனரக வாகனங்களுக்கான பயிற்சி குறைந்தது 6 வாரங்கள் இருக்க வேண்டும் போன்ற விதி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலமாக இனி வாகன ஓட்டிகள் எளிதாக ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.
காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் உட்பட 3 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்