ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்..!! மக்களே செம குட் நியூஸ் காத்திருக்கு..!!
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கியுள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகிறது.
இந்த பொருட்கள் எடை மாறக்கூடாது, ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. அதன்படி நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஒரு முறை எடை பார்க்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வந்ததும் ஒரு முறை எடை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக பொருட்களில் எடை குறைவதாக வைக்கப்படும் புகார்கள் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதாவது அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குள் மொத்தமாக கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை, ரேஷன் ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள், முறைகேடு செய்கிறார்கள் என்று தோன்றினால் அதை பற்றி புகார் அளிக்கலாம். இதற்காக 18004255901 என்ற புகார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான புகார்களை அளிக்க முடியும்.
Read More : குளித்துவிட்டு ஈரமான முடியுடன் தூங்கினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!