முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

NEET-UG 2024 தாள் கசிவு வழக்கு - ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

NEET-UG 2024 paper leak case: A total of 43 petitions are listed related to the NEET matter. The top court bench led by Chief Justice of India DY Chandrachud will hear the matter.
02:11 PM Jul 11, 2024 IST | Mari Thangam
Advertisement

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில், தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை மூலம் 44 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘இளநிலை நீட் கலந்தாய்வு செயல்முறை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும். கலந்தாய்வு செயல்பாட்டின் போதோ அல்லது அதற்குப் பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பத்திருந்தால், அந்த விண்ணப்பம் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags :
NEET-UG 2024NEET-UG 2024 paper leak casesupreme court
Advertisement
Next Article