For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு..! மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..!

06:15 AM May 05, 2024 IST | Baskar
நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு    மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்தாண்டும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் 2024, 2025ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று(05.05.2024)நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இந்தாண்டு ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகிறன்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

இந்தியாவில் உள்ள 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு குறித்து சந்தேகங்கள் எழுந்தால் 01140759000 என்ற எண்ணிலோ, அல்லது NEET@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.மேலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேசிய தேர்வு முகமை, அவற்றை ஒவ்வொன்றாக தெரிந்துகொள்ளலாம்.

1)முழுக்கை சட்டை அணியக்கூடாது

2)மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது

3)தங்க நகை ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது

4)மொபைல் போன் எடுத்து செல்லக்கூடாது

5)குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும்

6)தெளிவில்லாத போட்டோ, கையொப்பம் உள்ள அட்மிட் கார்டுகளை மீண்டும் சரியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும்.

7)எலெக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது.

8)காலணி அணியக்கூடாது

9) மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக் கொள்ளலாம்.

மேலும் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஹால்டிக்கெட்களில் குறிப்பிட்டுள்ளவையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். தாமதமாக வருகை தருபவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

Read More: சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை..!! மே 19ஆம் தேதி ஆரம்பம்..!! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

Tags :
Advertisement