முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுளுக்கால் உண்டான வீக்கத்தை உடனே சரிசெய்யும் இயற்கை வைத்தியம்..!! டிரை பண்ணி பாருங்க..!!

Generally, if we have frequent sprains in our body, we go to an English doctor for treatment. But, in this post, we will see how to cure that sprain with natural remedies.
05:30 AM Nov 02, 2024 IST | Chella
Advertisement

பொதுவாக நம் உடலில் அடிக்கடி சுளுக்கு உண்டானால் அதற்கு ஆங்கில மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுப்போம். ஆனால், இயற்கை வைத்தியம் மூலம் எப்படி அந்த சுளுக்கை குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

Advertisement

உதாரணமாக பல் வலிக்கு உதவும் கிராம்பு எண்ணெய் பற்றி பார்ப்போம். இந்த கிராம்பு எண்ணெய்யை சுளுக்கிலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இயற்கை முறையில் எப்படி சுளுக்கை விரட்டலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்.

பொதுவாக கல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் சுளுக்கு வலியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. மலிவாய் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.

இந்த ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தல் நலம் சேர்க்கும். பொதுவாக ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், ஆப்பிள் வினிகரில் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்கும் பண்புகள் உள்ளன .

பொதுவாக வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தடம் அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும். அதேபோல், ஆலிவ் எண்ணெய் கூட வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. சுளுக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது சுளுக்கால் உண்டான வீக்கத்தை நீக்குகிறது.

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
ஆலிவ் ஆயில்உடல் ஆரோக்கியம்எண்ணெய்கல் உப்பு
Advertisement
Next Article