இயற்கை விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!
தற்போதுள்ள காலநிலையில் விரைவாக விவசாயம் மாறிவிட்டது. அதாவது ரெடிமேட் விவசாயம் நாடு முழுவதும் பரவிவிட்டது. செயற்கையான உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் மூலம் விவசாய செய்யப்படுகிறது. இதனால் நிலங்கள் மாசுபடுவது மட்டுமின்றி, இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது.
இயற்கை விவசாயப் விளைபொருட்கள் என்ற பெயரில் கிடைக்கும் பலவும் போலியானவை பரவிகிடக்கிறது. விவசாயம் செய்வதற்கு மண் வளம் என்பது மிகவும் அவசியம். இயற்கை விவசாயத்தில் முற்றிலும் இயற்கை உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம், சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகிய உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் இயற்கை விவசாயிகளுக்கு மானியமும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இயற்கை விவசாயம் செய்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான விருது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
முதல் பரிசாக 1,00,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 60,000 ரூபாயும், 3-வது பரிசாக 40,000 ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள தகுதியுள்ள விவசாயிகள் இதற்கான விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in - இல் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை..? இன்றைக்குள் முதல்வர் அறிவிப்பார்..!! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்..!!