தமிழக புயல் பாதிப்பு.! மத்திய வானிலை ஆய்வு மையத்தின் தவறு என்ன.? தலைமைச் செயலாளர் அறிக்கை.!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மாநில தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் வேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும்பளவில் சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 116 சென்டிமீட்டர் மழையும் திருச்செந்தூரில் 92 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டத்தில் சில பகுதிகளுக்கு படகில் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 1350 அரசு பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அவர் அதில் 250 பேர் மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். மேலும் ஒன்பது ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த கன மழை பாதித்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் இறந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு நிவாரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தவறான வானிலை கணிப்புதான் இவ்வளவு பெரிய சேதத்திற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். தேசிய வானிலை ஆய்வு மையம் சரியாக கனித்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார்.