முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிகிரி போதும்.. ரூ. 39,000 சம்பளம்.. நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

National Insurance Company (NICL), one of the Public Sector Insurance Companies of India, has issued a notification to fill the vacancies of Assistant.
11:04 AM Oct 28, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் (NICL) உதவியாளர் (Assistant) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

Advertisement

காலியிடங்களின் எண்ணிக்கை : 500

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.10.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : 39,000

தேர்வு செய்யப்படும் முறை : இத முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://nationalinsurance.nic.co.in/en/recruitments என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.11.2024

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Read more ; மனைவியின் பெயரில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தால் பிரீமியம் மலிவாகுமா? விதி என்ன சொல்கிறது..

Tags :
National Insurance CompanyNICLPublic Sector Insurance Companies of Indiavacancies
Advertisement
Next Article