For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை ; தலைசுற்றிப்போன பயணிகள்! இதுதான் காரணமா?

07:55 PM Apr 26, 2024 IST | Mari Thangam
அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை   தலைசுற்றிப்போன பயணிகள்  இதுதான் காரணமா
Advertisement

திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.

Advertisement

தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, தேனி, கம்பம், கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக சுமார் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு பேருந்துகளில் உலக ரகசிய வார்த்தையான திருக்குறளை மற்றும் அதன் அதிகாரங்களை வைத்து தமிழின் பெருமையை வெளிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட TN 57 N 2410 என்ற அரசுப் பேருந்து திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசுப் பேருந்து என்று மின்னணு பெயர் பலகையில் சீன மொழியுடன் பேருந்து நிலையம் வந்தது.

பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சீன மொழியில் அரசு பேருந்து சென்றதால், பேருந்தில் ஏறும் பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ் வார்த்தைகளுக்கு பதிலாக சீன மொழியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தி மொழியை மட்டுமே எதிர்க்கும் தமிழகத்தில், சீன மொழியில் அரசு பேருந்து இயக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களிடம் கேட்டபோது, "அந்த பேருந்தின் டிஸ்பிளேவில் வரக்கூடிய எழுத்துக்களில் தொழில்நுட்ப கோளாறால் இப்படி தெரிகிறது. அதை விரைவில் சரி செய்து விடுவோம்" என்று கூறினர். இருப்பினும், சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் நீண்ட நேரம் குழப்பத்தில் இருந்தன.

Tags :
Advertisement