தமிழ் & ஆங்கிலம் தெரிந்தால் போதும்... அரசு சார்பில் மாதம் ஊதியம் ரூ.20,000...! முழு விவரம்
நாமக்கல் மாவட்ட கால நிலை மாற்ற இயக்க குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும் தணிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் அவர்களின் முதன்மை திட்டமான தமிழ்நாடு காலநிலை மாற்ற தொடங்கியுள்ளது. இயக்கத்தைத்தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கால நிலை மாற்ற இயக்க குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்ததரவின்படி நாமக்கல் மாவட்ட கால நிலை மாற்ற இயக்க குழு 08.09.2023 அன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இக்குழுவிற்கு அலுவலக பணிகள் மேற்கொள்ள ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. பணிபுரிய வேண்டிய காலம் 12 மாதம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கூடுதல் தகுதியாக தட்டச்சுக் கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாதம் ஊதியம் ரூபாய் 20,000/-. (பணிபுரியும் காலம் 12 மாதங்கள் மட்டுமே). விண்ணப்பதாரர் சுய விவரங்களை தமிழ்/ ஆங்கில மொழியில் தட்டச்சு செய்து மேலாளர், மாவட்ட மகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயக்கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி, நாமக்கல் மாவட்டம் 637 001 முகவரிக்கு வரும் 16.09.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கால கெடுவிற்கு பின்னர்/அஞ்சலக காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.