For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மியான்மர் போர்!. விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்!.

07:03 AM Dec 25, 2024 IST | Kokila
மியான்மர் போர்   விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
Advertisement

Myanmar War: தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் நில நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு ஏற்பாடு செய்ய சிலர் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதாவது உணவுக்காக சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கூட சமூக விரோத செயல்களுக்கு மாறி வருகின்றனர். அதாவது மியான்மரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விபச்சாரத்தில் நுழைய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

Advertisement

தி நியூயார்க் டைம்ஸின்படி, கடந்த 3 - 4 ஆண்டுகளில் மியான்மரில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் வருமான ஆதாரமாக விபசாரத்தை நாடிச்செல்கின்றனர். இருப்பினும், ராணுவ ஆட்சிக்குழு இந்த பிரச்சனையில் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க எந்த நோக்கத்தையும் காட்டவில்லை.

பிப்ரவரி 2021ல் ராணுவ சதிப்புரட்சி மூலம் மியான்மரின் ஆட்சியை கைப்பற்றியது. கொரோனா ஊரடங்கு காரணமாக மியான்மரின் நிலைமை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இதற்கு மத்தியில் மியான்மர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து அங்கு உள்நாட்டுப்போர் வெடித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அங்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்க விகிதம் 26 சதவீதத்தை எட்டியுள்ளதால், சாதாரண குடிமக்கள் அன்றாட தேவைகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்தநிலையில், அடுத்த நிதியாண்டில் மியான்மரின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக மாறலாம் என உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், எங்களது அன்றாட செலவுகளை ஈடுகட்டுவது சவாலானது. எங்களுக்கு ஒரே வழி பாலியல் மூலம் சம்பாதிப்பது. மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மாண்டலேயில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

Readmore: நடுவானில் விமானம் மீது மின்னல் தாக்கிய அதிர்ச்சி!. அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பீதி!. வைரல் புகைப்படங்கள்!

Tags :
Advertisement