கஜகஸ்தான் விமான விபத்தின்போது விமானத்திற்குள் என்ன நடந்தது..? ரத்தக் கரையுடன் அலறிய பயணிகள்..!! வைரலாகும் வீடியோ..!!
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தான் நாட்டில் விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதில் பயணி ஒருவர் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து நேற்று காலையில், ரஷ்யாவின் குரோசானிக்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் அஜர்பைஜானை சேர்ந்த 37 பேர், ரஷ்யாவை சேர்ந்த 10 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 6 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் என 67 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் விமானிகள், ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர்.
கஜகஸ்தான் நாட்டின் வான் பகுதியில் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த விமானத்தின் விமானி, உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு என்ன தகவல் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அக்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானம் கீழ் நோக்கி பறந்தது. அப்போது, விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியானதாக கூறப்படுகிறது. முன்னதாக இது தொடர்பான வெளிப்புறத்தில் பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின. தற்போது மேலும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், விமானத்துக்கு உள்ளே இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். விமானம் வானில் கட்டுப்பாடின்றி பறந்த காட்சிகளும், விமானம் விபத்துக்குள்ளான பிறகு பயணிகள் ரத்தக் கரையுடன் இருக்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. அந்த பயணி எடுத்த வீடியோவில், விமானம் சர்ரென பறக்கிறது. உள்ளே சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒலிக்கும் சவுண்ட் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்போது விமான பயணிகள் காட் இஸ் கிரேட்.. காட் இஸ் கிரேட் என்று சொல்லுகிறார்கள். தொடர்ந்து விமான விபத்துக்குள்ளானதும், பயணிகள் ரத்தக் கரையோடு கூச்சலிட்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து ரஷ்யா அதிகாரிகள் கூறுகையில், பறவை மோதியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தை ஆய்வு செய்தபோது, குண்டு துளைக்கப்பட்டது போல் இருப்பதாகவும், இதனால் சதிச்செயல் இருக்கலாமோ என்றும் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1,000 கிடையாது..!! தமிழ்நாடு அரசு வெளியிடப் போகும் ஜாக்பாட் அறிவிப்பு..!!